Thu. May 21st, 2026

கார்ப்பந்தாட்டத்தில் மட்டுவில் மோகனதாஸ் அணி சம்பியன் 

தென்மராட்சி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில்  மட்டுவில் மோகனதாஸ் அணி சம்பியனாகியது.
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள்  நேற்று  மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களிற்கான இறுதியாட்டத்தில் மட்டுவில் மோகனதாஸ் அணியை எதிர்த்து கச்சாய் டைமன்ஸ் அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில் முதல் 2 செற்களிலும் மட்டுவில் மோகனதாஸ் அணி 25:10, 25:9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  3வது செற்றில் கச்சாய் டைமன்ஸ் அணி பலத்த போராட்டத்தில் 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது செற்றில் மட்டுவில் மோகனதாஸ் அணி தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி  25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed