காரைதீவு மீனவனுக்கு கிடைத்த அதிஸ்டம்..! அள்ள..அள்ள.. மீன்கள்.
மட்டக்களப்பு- காரைதீவை சோ்ந்த மீனவா் ஒருவாின் வலையில் சுமாா் 10 ஆயிரம் கிலோ பாரை மீன் குட்டிகள் சிக்கியுள்ளது. இதனையடுத்து கடற்கரையில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
அண்மைக்காலமாக 1 கிலோ கிராம் மீன் 350 ரூபாவிற்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் கடலோரத்தில் மீன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன்
ஊருக்குள் மீன் விற்பனை செய்பவர்கள் ஒரு கிலோ கிராம் மீன் 150 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக கடற்கரையை நோக்கி பெருமளவான பொதுமக்கள் விரைந்துள்ளதுடன்
மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வலையில் இருந்து தவறிய மீன்களை மாத்திரம் எடுத்து ஒரு லட்சம் ரூபாவுக்கும் ஒரு பொதுமகன் விற்பனை செய்துள்ளதாக
மக்கள் கூறுகின்றனா். அத்துடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.