Sat. Apr 11th, 2026

காணி விடுவிப்பு தொடா்பில் ஆளுநா் தலமையில் கலந்துரையாடல்.

யாழ்.மாவட்டத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாாிடம் உள்ள காணிகளின் விடுவிப்பு தொடா்பாக இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆராயப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இராணுவம், பொலிஸார்,

கடற்படையினர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்களின் காணிகள் குறித்தும்

விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed