காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட குழு மோதலில் ஏழு பேர் படுகாயம்
காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட குழு மோதலில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த சம்பவம் மந்துவில் காரைக்காட்டு பகுதியில் 8/1/2020 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம் பெற்றது
இந்ந சம்பவத்தில் து.தர்சினி வயது-30 வி.நாகம்மா வயது -70 க.சிதம்பரநாதன் வயது -70 அ.சுதாகா வயது -29 ச.சத்தியவதனன் வயது-28 வெ.ரூபன் வயது- 48 வெ.சுபாசினி வயது-36 ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்ந சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு ஆண்களும் கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது
அயல் வீட்டுக்காரருடன் ஏற்பட்ட காணித் தகராறில் வாகனத்தில் வந்திறங்கிய கும்பல் காணி வாங்கியவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற வேளையில் வீடு புகுந்த எதிர் தரப்பினர் வேலியைக் கொழுத்தி அடிதடியில் இறங்கியுள்ளனர்.
119 அவசர பொலிசுக்கு அறிவித்த போது பொலிசார் வந்து நான்கு ஆண்களையும் கைது செய்து சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காயமடைந்த பெண்கள் அவசர அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்