Sat. May 16th, 2026

காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக முறைப்பாடு!! -தலமை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தார்: டக்ளஸ்-

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரிக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினாலேயே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஊடக சந்திப்பினை நடத்திய முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனோரின் சங்கத்தலைவி நான் கடந்த காலங்களில் கோத்தபாஜ ராஜபக்சவுடன் இணைந்து ஆட் கடத்தல் மற்றும் படுகொலைகளில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டதாக பகிரங்கமா குற்றம் சுமத்தியிருந்தார்.

இக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் அப்படியாயின் நான் கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தால் அதனை சம்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed