Mon. Oct 7th, 2024

காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு 6,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு

குடும்ப உறுப்பினர் ஒருவர் வலிந்து காணாமல் ஆக்கப்படுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வைத்திருக்கும் உறவினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இந்த சான்றிதழ் ஆனது காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தினால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள 500 பேர்வரையிலான உறவினர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்று தெரியவருகின்றது.

குறித்த சான்றிதழானது, காணமல் ஆக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார் என்ற அடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் வழங்கப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்காரணமாக, பலர் இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமைச்சரவை பாத்திரம் ஒன்றை அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாத்திரத்துக்கு அமைய, சான்றிதழைப் பெற்றுக்கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா வழங்கபட இருக்கிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்