காணாமல் ஆக்கப்படோரின் குடும்பங்களுக்கு நவம்பர் முதல் மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு
காணாமல் ஆக்கப்படோரின் குடும்ப உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ .6,000 வரை இடைக்கால கொடுப்பனவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் காணாமல் போன போலீஸ் மற்றும் இராணுவத்தின் குடும்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.
2019 நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம், ஆகஸ்ட் 2018 இல் தனது இடைக்கால அறிக்கையில் சான்றிதழ் பெற்ற நபர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகள் 2019 பட்ஜெட்டில் இணைக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடைக்கால நிவாரணம் வழங்க நிதி அமைச்சு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அமைச்சு ஆகியவற்றின் கூட்டான வேண்டுகோளுக்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
“இதன் மூலம் காணாமல் போனமைக்கான பத்திரத்தை பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 6000 மாதம் நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட இருக்கின்றது . இந்த நிவாரணம் ஆனது காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகம் எதிர்காலத்தில் எடுக்கவிருக்கும் இழப்பீட்டு நடவடிக்கைக்கு ஏற்ப மாற்றப்படும் என்றும் தெரியவருகிறது .
இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் உட்பட இதுவரை வடக்கு மற்றும் தெற்கின் குடும்பங்களுக்கு காணாமல் போனமைக்கான 656 சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.மேலும் சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்காக, பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தின் கூடுதல் அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.