Mon. Dec 9th, 2024

காட்டு யானை தாக்கி, வயோதிப பெண் மற்றும் சிறுமி பலி

OLYMPUS DIGITAL CAMERA

அம்பாறையில் காட்டு யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு வயோதிப பெண்ணும் அவரது 4 வயதான பேத்தியும் பலியாகியுள்ளனர்
கடையொன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தவர்களுக்கே இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் அம்பாறை சுகதகம பகுதியில் ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே 4 வயதான சிறுமி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அதிக வறட்சி காரணமாக யானைகள் நீரை தேடி அலைந்து திரிவதாகவும் , தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் அடிக்கடி இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்