கவிஞர் சூரிய நிலாவின் நூல் வெளியீடு
பொதுச் சுகாதார பரிசோதகரும், கவிஞருமான ஆ.ஜென்சன் றொனால்ட் (கவிஞர் சூரியநிலா) எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ9 வீதி, கொடிகாமத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சி.சுதோகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடா வள்ளுவன் வழி உலக இணையப்பள்ளி திருமதி. ஜோதி ஜெயக்குமார், உசன் பவுண்டேசன் உபதலைவர் வைத்திய கலாநிதி. ஐ.ஜெபநாமகணேசன், சாவகச்சேரி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி. க.சிவசுதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.