கவிஞர் சூரியநிலாவின் “சீர்மியம்” சிறுகதை நூல்வெளியீடு.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்(கவிஞர் சூரியநிலா) எழுதிய “சீர்மியம்” எனும் சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை (13.03.3025) மாலை 2.30 மணிக்கு கெடிகாமத்திலுள்ள சாவகச்சேரி பிரதேசசபை தலைமைக்காரியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலின் ஆய்வுரையை கிளிநொச்சி மாவட்ட சமுதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி ஜோசபின் திருமகள் சிவசங்கரும், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நயப்புரையை உளவளத்துணையாளர் அ.அஜந்தனும் நிகழ்த்தவுள்ளனர். நூலின் முதற்பிரதியை சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் பெற்றுச் சிறப்பிக்கவுள்ளார்.

இது நூலாசிரியர் ஜென்சன் றொனால்டின் பதினான்காவது வெளியீடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.