கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி முடக்காடு நெல்லியடி கிழக்கை சேர்ந்த குணசீலன் கிருஷ்ணஜெயந்தி (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
சிறிது காலமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தாயார் அழுதழுது கடிதம் எழுதியதாகவும் 4ம் ஆண்டு படிக்கும் மகன் முதல்கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.