கள்ள மண் ஏத்துவோர் பொலிஸ் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்
06.01.2020ஆண்டு இரவு குடத்தனை பொற்பதி பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக பருத்தித்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் வாகனத்தில் மணல் கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்று உள்ளார்கள். அங்கு நின்றவர்கள் பொலீஸ் வாகனத்திற்கு கல்லுகளால் எறிந்துசேதம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள். போலீசாரை கண்டதும் 3 மோட்டார் சைக்கிள்களையும் விட்டு விட்டு ஓடி மறைந்தார்கள். போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களையும் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்