கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

37 வருடங்கள் அரச சேவையாற்றி அகவை அறுபது எய்தி நாளை 31.01.2025 வெள்ளிக்கிழமை அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் திருஞானம் ஜோன் குயின்ரஸ் அவர்களின் பிரிவுபசார வைபவம் இன்று வியாழக்கிழமை கௌரவ கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் பங்கேற்புடன் இசுருபாய கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து ஆணையாளர் நாயகமாக பணியை நிறைவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.