Mon. Aug 10th, 2026

கலை ஒளி விளையாட்டுக் கழகத்தின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

கலை ஒளி சன சமூக நிலையத்தின் 25வது வெள்ளி விழாவை முன்னிட்டு கலை ஒளி விளையாட்டுக் கழகம் நடத்தும் மின்னொளியிலான வொலிபோல் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு கலை ஒளி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இறுதியாட்டத்தில் புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணி மோதவுள்ளது.
கலை ஒளி விளையாட்டுக் கழக தலைவர் இ.தயானந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தொழிலதிபர் ஞ.சகாயநாதன், சிறப்பு விருந்தினர்களாக புலம்பெயர் ஒன்றிய உறுப்பினர் பாலன் ஆனந்தராசா, அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏச்.யு.பிரியந்த, யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்க செயலாளர் சி.தயாபாலன் மற்றும் கெளரவ விருந்தினர்களாக வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகத்தர் என்.விநாயகமூர்த்தி, கலை ஒளி சன சமூக நிலையத்தின் தலைவர் செ.செல்வரூபன், முன்னாள் விளையாட்டுக் கழக தலைவர் க.கிருபாகரன், கலை ஒளி முன்பள்ளி தலைவர் சி.மயூரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed