வல்வெட்டித்துறை கலாச்சார இலக்கிய மன்றம் தமது 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தவுள்ளது.
இதில் நாடகம், சிறுகதை, பாரம்பரிய குழு நடனம் போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது.
நாடகம் 10 நபர்களுக்கு உட்பட்டு 15 நிமிடம் தொடக்கம் 20 நிமிடங்களுள் அமைதல் வேண்டும், சிறுகதை போட்டியன்று தலைப்பு வழங்கப்பட்டு 2 மணித்தியாலங்கள் வழங்கப்படும், பாரம்பரிய குழு நடனம் 10 நபர்களுக்கு உட்பட்டு 5 நிமிடம் தொடக்கம் 10 நிமிடம் வரை மயிலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம் போன்றவை உள்ளடங்கப்படலாம். போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் எதிர்வரும் 27.09.2019ம் திகதிக்கு முன்னர் 0772826326, 0778201216 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.