கலட்டி ஐக்கிய சனசமூக நிலைய புதுவருட விழா

கரவெட்டி கரணவாய் கிழக்கு கலட்டி ஐக்கிய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கலட்டி ஐக்கிய சனசமூக நிலைய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நிலையத் தலைவர் ம.நிரோஷன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி பரமேஸ் நகைமாடம் உரிமையாளர் நவரத்தினம் இலக்சுமிகாந்தன், சிறப்பு விருந்தினராக நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமல்வீர அவர்களும், கெளரவ விருந்தினர்களாக உதைபந்தாட்ட வீரர் அ.திருப்புகழ்ராஜா, ஐ குறோ தலைமைத்துவ வழிகாட்டல் நிலையத்தின் இணைப்பாளர் திருமதி.ரஞ்சி அன்பழகன் போல், முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரகுவரன் மேரிவினோ, தொழில் முயற்சியாளர் க.சுதர்சன், முறிகண்டி புகையிரத நிலைய அதிபர் சி.ஜனகன், தொழில் முயற்சியாளர் அ.றெஜீவன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.