கற்றலின்போதுப ல்வேறு வழிகளில் மூளைக்கு தூண்டலை வழங்கி மீளமீள வலியுறுத்தும் போது இலகுவாக கற்றல் அடைவுகளைப் பெறமுடியும் என பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்

கற்றலின்போதுப ல்வேறு வழிகளில் மூளைக்கு தூண்டலை வழங்கி மீளமீள வலியுறுத்தும் போது இலகுவாக கற்றல் அடைவுகளைப் பெறமுடியும் என பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
வளரிளம்பருவ மாணவர்கள் தமது சக்தியை கல்வியின்பால் அதிகம் செலுத்த வேண்டும். கற்றலின்போது பல்வேறு வழிகளில் மூளைக்குத் தூண்டலை வழங்கி மீளமீள வலியுறுத்தும் போது நரம்பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாவதோடு அவைமேலும் வலுப்பெறுவதால் இலகுவாக கற்றல் அடைவுகளைப் பெறமுடியும் எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் கிளி/குமுழமுனை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வளரிளம்பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வொன்றை நடாத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலுந்தெரிவிக்கையில், மூளையினால் ஒருவிடயத்தை தெடர்ச்சியாக இருபது நிமிடங்களே சுறுசுறுப்புடன் கிரகிக்க முடியும். முதல் பத்துநிமிடங்கள் கற்றலுக்கான தூண்டலையும் அடுத்த இருபது நிமிடங்கள் கற்றல் செயற்பாடுகளையும் இறுதிப் பத்து நிமிடங்கள் கற்றவற்றை மீள வலியுறுத்துவதற்குமாகவே ஒருபாடவேளை நற்பது நிமிடங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
நாமும் சுயமாக பாடங்களை கற்கும்போது பாடங்களையும் பாடஅலகுகளையும் மாறிமாறித் திட்டமிட்டும் படிக்க வேண்டும்.
வளரிளம் பருவத்தில் ஏராளமான மனவழுச்சி சிக்கல்கள் ஏற்படும். அவற்றை உங்களிடமுள்ள வாழ்க்கைத் திறன்களைப் பயன்படுத்தி மற்றும் பெரியோரின் துணையுடன் அறிவுபூர்வமாகக் கையாளவேண்டும்.
தகுந்த போசாக்கான உணவைத் தெரிவு செய்வதோடு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்து சரியான அறிவைப்பெற்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் பாலியல் பிறழ்வான நடத்தைகளுக்கும் போதைப்பொருள் பாவனைக்கும் உட்படாது கல்வியில் மிகுந்த நாட்டத்தைச் செலுத்தவேண்டும்.
நல்லதொடுகை கெட்டதொடுகை எவையென புரிந்துகொண்டு, கெட்டதொடுகை இன்னொருவரால் ஏற்படுத்தப்படும்போது உடனடியாக அதனை செய்யவேண்டாமென மறுத்தல், அவ்விடத்திலிருந்த வெளியேறுதல் பின்னர் இதுகுறித்து நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அதைத் தெரிவித்தல் என்பன துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் வாய்ப்பைத்தடுத்து பாதுகாப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.