கற்கோவளம் பகுதியில் திடீரென இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கற்கோவளம் பகுதியில் திடீரென இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த
இராசரத்தினம் சுமணன் (வயது 22)
எனும் இளைஞரே இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார்.
தமது வீட்டில் வசித்து வந்த நிலையில் நடந்து வந்த போது விழுந்துள்ளார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக
பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.