கற்கோவளம் பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்
வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் கற்கோவளம் புனித நகர் திருமால்புரம் பகுதியைச் சேர்ந்த ரஜீவன் ரஞ்சிதா (வயது 4) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை மதியம் தனது வீட்டில் இருந்த கிணற்றிலேயே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.