கற்கோவளம் பகுதியில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு கொலையா? எனச் சந்தேகம் தீவிர விசாரணை

வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கற்கோவளம் வீரபத்திரர் கோயிலடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 53), சுப்பிரமணியம் மேரி றீற்றா (வயது 54) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தலையில் இரத்த காயம் உள்ளதாகவும் கொங்கிறீற் கல்லிலான் கொலை செய்திருக்க கூடும் என்கிற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மகள் தனது மாமி வீட்டில் தங்கியிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.