கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டிகள் ஆரம்பம்
அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டிகள் நாளை சனிக்கிழமை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு தினமும் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டி நிரலுக்கேற்ப மாணவர்களை வழிப்படுத்தி அழைத்து வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.