Thu. Sep 17th, 2026

கருணையம்பதி சனசமூக நிலையம் திறப்பு விழா

புலம்பெயர் வாழ் மற்றும் கருணையம்பதி வாழ் உறவுகளின் நிதி அனுசரணையுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கருணையம்பதி சனசமூக நிலையமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.17 தொடக்கம் 10.47 வரையுள்ள சுபவேளையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
கருணையம்பதி சனசமூக நிலைய அபிவிருத்திக்குழு தலைவர் தனபாலசிங்கம் செல்வகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் துணை வேந்தர்
பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா,
சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நாகலிங்கம் கமலதாசன், யாழ் போதனா வைத்தியசாலை சத்திரச் சிகிச்சை நிபுணர், கந்தசாமி உமாசங்கர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் /கரணவாய் தாமோதரா வித்தியாலய அதிபர் ஆனந்தராசா விமலராஜா ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply