Thu. Oct 3rd, 2024

கரவெட்டி பிரதேச செயலாளரின் மனைவி திடீர் மரணம்

கரவெட்டி பிரதேச செயலாளரின் மனைவி இன்று சனிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அவர்களின் மனைவி உதயகுமாரி (வயது 50) என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார்.
பின் இணைப்பு
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
உதயகுமாரி அவர்களுக்கு இரு நாட்களுக்கு முன்பு முள்ளு குற்றிய காயம் மாறாமல் கால் வீங்கியுள்ளது. இதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, காயம் ஆறாது விட்டால் உடலில் வேறொரு பகுதியில் இருந்து தோலை அகற்றி சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சத்திர சிகிச்சைக்காக சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்ற போது அவர் பயந்த நிலையில் தனக்கு சிகிச்சை வேண்டாம் என அழுதபடி சென்றுள்ளார். அந்த பயத்தில் சிகிச்சை ஆரம்பிக்க முன்னரே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்