Mon. Aug 10th, 2026

கரவெட்டி பிரதேச செயலக மெய்வல்லுனர் 400 மீற்றர் ஓட்டத்தில் லகீஷன் தங்கம்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் கலட்டி ஐக்கிய சன சமூக நிலைய விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த லகீஷன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் இன்று கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் கலட்டி ஐக்கிய சன சமூக நிலைய விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த லகீஷன் தங்கப் பதக்கத்தையும் அதே கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பரம்நாத் வெள்ளிப் பதக்கத்தையும் கரணவாய் கிழக்கு விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கஜானன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed