கரவெட்டி பிரதேச செயலக மெய்வல்லுனர் தட்டெறிதலில் மதுஷிகா தங்கம்
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மதுசியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கணவாய் கிழக்கு விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மதுசியா தங்கப் பதக்கத்தையும் அதே கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சபானா வெள்ளிப் பதக்கத்தையும் கலட்டி ஐக்கிய சன சமூக நிலைய விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கனிஷா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.