கரவெட்டி பிரதேச செயலக பண்பாட்டு விழா
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவை தலைவருமான ஈ.தயாரூபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும்
சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் செல்வி.சுகுணலினி விஜயரட்ணம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான கிருஷ்ணபிள்ளை நடராசா மற்றும் செல்வி.தம்பு சரோஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.