Sun. Apr 12th, 2026

கரவெட்டி பிரதேச சுகாதார பிரிவில் 278 இடங்களில் டெங்கு

 

கரவெட்டி சுகாதார பிரிவிற்குட்பட்ட பிரிவுகளில் கடந்த 3மாதங்களில் 278 இடங்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லியடி சுகாதார பிரிவில் 132 இடங்களும், துன்னாலை சுகாதார பிரிவில் 84 இடங்களும், கரவெட்டி சுகாதார பிரிவில் 35 இடங்களும்,  அல்வாய் சுகாதார பிரிவில் 15 இடங்களும்,  உடுப்பிட்டி சுகாதார பிரிவில் 12 இடங்களுமாக 278 இடங்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 32 வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க ஒவ்வொருவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed