Sun. Apr 12th, 2026

கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும்
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வடமராட்சி கரணவாய் மத்தி கருணையம்பதி சனசமூக நிலைய திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருணையம்பதி சன சமூக நிலைய உறுப்பினர்களால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் அவர்களிடம் கொலின்ஸ் சிறுவர் பூங்காவிற்கு அதிக வெளிச்சம் தரும் மின்குமிழ்களை பொருத்தித் தருமாறும், கருணையம்பதி சன சமூக நிலையத்தில் கழிவுகளை தரம் பிரித்து இடுவதற்கான பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் தொகுதியினை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மக்களின் தேவையே தவிசாளரின் சேவை எனக் கருதி அன்றைய தினமே கோரிக்கைகள் இரண்டையும் பூர்த்தி செய்துள்ளார். மக்களின் தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதோடு கழிவு முகாமைத்துவம் சிறப்பாக நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed