Wed. Mar 11th, 2026

கரவெட்டி பிரதேசத்தில் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

கரவெட்டி பிரதேச பிரிவில் உள்ள 5 கிராம சேவையாளர் பிரிவில் இருந்து 200 நலிவடைந்த குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்றினால் வீட்டு தோட்டத்திற்கான பயிர் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நெம்பு உதவி நிறுவனத்தால் இந்த உதவிகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

தற்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடியில் வீட்டு திட்டத்தின் மூலம் சுய உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் பொழுது தலா ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 மரக்கறி பயிர் கன்றுகள் மற்றும் 10 கிலோ சேதன உரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள், நெம்பு உதவி நிறுவன உறுப்பினர் மற்றும் பொது மக்கள் சமூகமளித்திருந்தனர்.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed