Sun. Nov 3rd, 2024

கரவெட்டி ஞானம்ஸ் சம்பியனாகியது. 

 

கிளிநொச்சி முறிப்பு உதயசூரியன்  விளையாட்டு கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் அணி சம்பியனாகியது.

நேற்று மின்னொளியில் இதன் இறுதியாட்டம் நடைபெற்றது. வடமாகாண ரீதியில் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் 102 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதியாட்டத்தில் கரவெட்டி ஞானம்ஸ் அணியை எதிர்த்து விஸ்வமடு நண்பர்கள் அணி மோதியது .
முதலில் துடுப்பெடுத்தாடிய கரவெட்டி ஞானம்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விஸ்வமடு நண்பர்கள் அணி 5 ஓவர்கள் நிறைவில் 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதனால் கரவெட்டி ஞானம்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்