Sat. May 16th, 2026

கரவெட்டி கோவிற்சந்தை வீடொன்றில் நகைகள் கொள்ளை

நெல்லியடி பொலீஸ் பிரிவினருக்கு உட்பட்ட வடமராட்சி கரவெட்டி கோவிற்சந்தை பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து சுமார் 19 பவுனுக்கு மேல் களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றிருக்கலாம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நெல்லியடி பொலீஸ் பிரிவினருக்கு உட்பட்ட வடமராட்சி கரவெட்டி கோவிற்சந்தையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக உள்ள வீட்டிலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் முதியவர்கள் மூன்று பேர் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டின் பின்பக்கமாக உள்ள கதவினை உடைத்து உள்நுழைந்து நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோப்பநாய் மற்றும் கைரேகை அடையாளம் கண்டுபிக்கும் பொலீஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed