Sun. Apr 12th, 2026

கரவெட்டி, உடுவில் பரிசோதனை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரவெட்டி சுகாதார பணிமனை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மருதங்கேணி மற்றும் தாவடியைச் சேர்ந்த இருவர், உடுவில் சுகாதார பணிமனையால் மூவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 126 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் கரவெட்டி பகுதியில் RDA நிறுவனத்தில் பணி புரியும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மருதனார்மடம் பகுதியில் தொற்றுள்ளானவருடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று  இல்லை என முடிவு கிடைத்தது. ஆனால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு மீண்டும் மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இதிலேயே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் மருதங்கேணி மற்றவர் தாவடியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் மருதங்கேணியால் தொற்றுள்ளாவர்கள் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed