கரவெட்டி ஆண்களுக்கான குண்டு போடுதலில் அபிராம் தங்கம்
கரவெட்டி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் அபிராம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கரணவாய் கிழக்கு விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அபிராம் தங்கப் பதக்கத்தையும்
இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த திவான்சயன் வெள்ளிப் பதக்கத்தையும் கலட்டி ஐக்கிய சன சமூக நிலைய விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பவிதாஸ் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.