கரவெட்டியில் விபத்து இருவர் பலி
மரணச் சடங்கிற்காக மோட்டார் சையிக்கிளில் வருகை தந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கரவெட்டி கோயிற்சந்தை பகுதியிலுள்ள பாலத்தடியில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த விஜயபாரத் நிஷாந்தன் (வயது 28) , யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீதியைச் சேர்ந்த செல்வநாயகம் சென்சன் மனோஜ்குமார் (வயது 31) என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.