Sat. Jun 14th, 2025

கரவெட்டியில் தாழையடி நீர் வழங்கல் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிப்பு

கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை சம்பிரதாயா பூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டது.
கிளிநொச்சி – இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் 13 நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டது. இதில் கரவெட்டி மத்தொனி பகுதியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கிக்கு முதலாவதாக தாழையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் பெறப்பட்டு கரவெட்டி மக்களுக்கு இன்று சம்பிரதாய பூர்வமாக நீர் வழங்கல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் மாவட்ட நீர் வழங்கல்  பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட நீர் வழங்கல் பொறுப்பதிகாரி  யசோதரன், பருத்திதுறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர் மதிவாணன்,
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் இராகவன்,
தொழில்நுட்ப உத்தியோகாத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சமய நடைமுறைகளுடன் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்