Sun. Apr 12th, 2026

கரவெட்டியில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நாட்களும் கிராம அலுவலகர் பிவுகளும்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுமக்களில் சினோபார்ம் கொவிட் 19 முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியானது எதிர்வரும் திங்கட்கிழமை 28.06.2021 முதல் ஏற்றப்படவுள்ளது.
பொதுமக்கள் தமக்கு வழங்கப்பட்ட முதலாவது தடுப்பூசி ஏற்றிய அட்டையையும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தினையும் கொண்டு வருவதோடு    பொதுமக்கள் குறித்த தினங்களில் நேரத்துடன் வருகை தருவதுடன் ஒழுங்காக வரிசையினைப் பேணி சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை உறுதிப்படுத்துமாறும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பின்வரும் திகதிகள் மற்றும் நேரத்தினைக் கருத்தில் கொண்டு கிராம சேவகர் பிரிவு மக்கள் செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 28.06.2021 திங்கட்கிழமை அன்று காலை 8.30 முதல் மாலை 3.30 வரை கரவெட்டி மேற்கு (J/363 ) பகுதி மக்களுக்கு கரவெட்டி சிறி நாரதா பாடசாலையிலும் 29.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 முதல் மாலை 3.30 வரை கரவெட்டி வடக்கு (J/364) மற்றும் கரவெட்டி மத்தி (J/367) பகுதி மக்களுக்கு கரவெட்டி திரு இருதயக் கல்லூரியிலும் 30.06.2021 புதன்கிழமை அன்று காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை இமையாணன் மேற்கு (J/359) பகுதி மக்களுக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் அதே தினம் மதியம் 1.30 முதல் மாலை 3.30 வரை அத்தாய் (J/381) பகுதி மக்களுக்கு அத்தாய் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகத்திலும் 01.07.2021 வியாழன் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நெல்லியடி (J/376) மற்றும் அல்வாய் தெற்கு (J/379) பகுதி மக்களுக்கு வடமராட்சி பெண்கள் மத்திய கல்லூரியிலும் 02.07.2021 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30மணி வரை நெல்லியடி வடக்கு (J/375), கட்டைவேலி (J/369) மற்றும் கரவெட்டி கிழக்கு (J/368) பகுதி மக்களுக்கு வடமராட்சி பெண்கள் மத்திய கல்லூரியிலும் 2வது தடுப்பூசி  ஏற்றப்படும். 03.07.2021 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மேற்குறித்த தினங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளத் தவறியவர்களுக்கும் முன்னணிக் களப்பணியாளர்களுக்கும் வடமாராட்சி பெண்கள் மத்திய கல்லூரியில் 2 வது தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed