Sun. Apr 12th, 2026

கரவெட்டியில் குண்டு சிறிது நேரம் பதற்றம்

கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இன்று (4) அருகில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சிறிது நேரம்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயம் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பாக நெல்லியடி பொலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அக்குண்டு வெடித்த குண்டின் பாகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அக்குண்டு வெடிப்பதற்கு சாத்தியமற்று காணப்பட்டதால் விசேட அதிரடிப்படை வரவழைக்காமல் நெல்லியடி பொலீஸாரே அதனைக் கொண்டு சென்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed