கரவெட்டியில் கயஸ் வான் தீபிடித்ததில் ஒருவர் காயம்
வடமராட்சி கரவெட்டி பகுதியில் திடீரென கயஸ் வான் தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வடமராட்சி கரவெட்டி திருஇருதய கல்லூரிக்கு முன்பாக உள்ள வீடொன்றில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் தர்மபாலன் சுதாகரன் (வயது 45) என்பவரே தீக் காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கயஸ் உரிமையாளர் தனது வீட்டில் வாகனத்தை இயங்கு நிலையில் விட்டு பின்புறமாக உள்ள இருக்கையில் இருந்து உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென வாகனம் தீப் பற்றியெரிந்துள்ளது. இதனை அவதானித்த அயல் வீட்டார் கூக்குரல் இட்ட போது வானத்தின் பின் இருக்கையில் இருந்த உரிமையாளரை எரிகாயத்துடன் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.