கரவெட்டியில் இரண்டாம் கட்ட இலவச யூரியா உர விநியோகம்
இரண்டாம் கட்ட இலவச யூரியா உர விநியோகம் இடம்பெறவுள்ளதாக கரவெட்டி கமநல சேவைகள் நிலையம் அறிவித்துள்ளனர்.
Japan FAO உதவி திட்டத்தில் 30 பரப்பிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 25 கிலோ யூரியாவிற்கு மேலதிகமாக 25 கிலோ யூரியாவினை 2 ஆம் கட்டமாக இலவசமாக வழங்க உரம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏற்கனவே 25 கிலோ யூரியாவினை இலவசமாக பெற்றவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச யூரியா உரத்தினை பெற வரும் போது தங்களுக்கு வழங்கப்பட்ட வயல் காணி இலக்கம், ஏக்கர் வரி பற்றுச்சீட்டு மற்றும் சந்தாபண பற்றுச்சீட்டு என்பவற்றை கொண்டு வருமாறும் அறிவித்துள்ளனர்.