கரம் தொடரில் கிண்ணங்களை வழித்துத் துடைத்தது கொக்குவில் இந்துக் கல்லூரி
யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு ஆண்கள், பெண்களுக்கான கரம் தொடரில் அனைத்துப் பிரிவிலும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

17 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாலய அணி பெற்றது.

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் கல்லூரி அணி மோதியது. இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும் பெற்றனர்.

20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை சென்பற்றிக்ஸ் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டனர்.

20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை சுண்டுக்குழி மகளிர் கல்லூரி அணி பெற்றது.