கரப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டங்கள்

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வரும் கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டங்கள் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இதில் ஏ பிரிவு இறுதிப் போட்டியில் புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து கெருடாவில் ஐக்கிய அணியும்


பி பிரிவினருக்கான போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து அளவெட்டி மத்திய அணியும் மோதவுள்ளன.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்க தலைவர் வ.செந்தூரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சி.சபாஆனந், சிறப்பு விருந்தினராக பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் எட்வின் குணரட்ணம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.