கரணவாய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நாயை கொலை செய்த மர்ம நபர்கள்
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் மத்தோணி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாயின் கழுத்தினை வெட்டி கொலை செய்து, வீட்டுக்கு சொத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு நடைபெற்றுள்ளது.
குறித்த வீட்டில் திருமணம் ஆகாத பெண் தனிமையில் வசித்து வந்த நிலையில் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் அவரது தந்தை உயிரிழந்த நிலையில் அந்த பெண் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் தனது வேலைநிறுத்தம் கொழுபிற்கு சென்ற நிலையில்
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்த இழிவான செயலை நிகழ்த்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.