கயிறு இழுத்தலில் கரவெட்டி பிரதேச செயலக பெண்கள் அணி சாதனை
யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான கயிறுத்தலுக்கான இறூதிப் போட்டிகள் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக அணியை எதிர்த்து பருத்தித்துறை பிரதேச செயலக அணி மோதியது.
இதில் கரவெட்டி பிரதேச செயலக அணி 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.