கபடியில் தேசியத்தில் கிளிநொச்சி சிவநகர் சாதிப்பு
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடிப் போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடி போட்டி அம்பாறை நிந்தவூர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியை எதிர்த்து கொழும்புகல மத்திய கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34:30 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.