கனடா தமிழ் இளைஞர் சாரங்கன் கொலையில் திருப்பம்,அதிரடியாக தமிழ் இளைஞர் கைது
கனடாவில் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் இளைஞன் தொடர்பான விசாரணையில் நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பூர்விகமா கொண்ட 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ஸ்காபோரோ பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் . கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார்.