கனடாவில் முஸ்லீம் குடும்பத்தை வாகனத்தால் மோதி கொன்ற நபர்

கனடாவின் டொரோண்டோ பகுதியில் வீதியை கடப்பதற்காக நின்ற முஸ்லீம் குடும்பம் ஒன்றை வெள்ளை இனத்தை சேர்ந்த 20 வயது நபர் ஒருவர் தனது பிக்கப் வாகனத்தால் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதுடன் 9 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.
நேற்று இரவு கனடா நேரம் 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 74 வயது பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் 46 வயது ஆண் , 44 வயது பெண் , 15 வயது சிறுமி ஆகியோர் வைத்தியசாலையில் இறந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபர் சம்பவ இடத்தில இருந்து 6 km தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு இனவாத தாக்குதலாகவே பார்க்கப்பதாக முஸ்லீம் அமைப்புகள் தெரிவித்துள்ளன