கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்திப்பு

கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று அவரது செயலகத்தில் சந்தித்து உரையாடினார்.
போருக்கு பின்னான வடமாகாணத்தின் நிலைமை தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இருந்தது. மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தாக்கம் வடமாகாணத்தின் மீது எவ்வாறு இருந்தது என்பது தொடர்பாகவும் கலந்து உரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்த சந்திப்பில் கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோனுடன் , கனடாவின் பிரச்சினைகள் மற்றும் ஒற்றுமை சம்பந்தமான ஆராச்சி அலுவலர் ஷர்மலா நாயுடு மற்றும் விக்கிரம்வீர் ஸுஹ் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்