கண் நோய் ஏற்பட்டுள்ள மாணவர்களையும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ்
கண் நோய் ஏற்பட்டுள்ள மாணவர்களையும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
கண் நோய் தாக்கம் மாணவர்களிடையே தீவிரமாக பரவலடைந்துள்ளது. தற்போது பரீட்சை காலமாகையால் தொற்றுக்குள்ளானவர்கள் ஏனையோருடன் இணைந்து பரீட்சை எழுதுவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது. தொற்றுக்குள்ளான மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்படாமல் அவர்களுக்கான தனியான இடம் ஒன்றை ஒதுக்கி பரீட்சை எழுதுவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.