கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இன்று கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கிளிநொச்சி விவேகானந்தர் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் தேனுஜன் (வயது 22) என்பவரே அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
க.பொ.த உ/த இல் கணிதத்துறையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்று மொறட்டுவ பல்கலைக்களகத்தில் முதலாம் வருட மாணவனுமாவார். இவ்வாண்டு தனது கல்வியை தொடர முடியாது இருப்பதாகவும், அடுத்த வருடத்தில் தனது கல்வியை தொடர உள்ளதாகவும் கூறி வந்துள்ளார். அத்துடன் மன அழுத்தத்திற்காக வைத்திய ஆலோசனையும் பெற்று வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.