Mon. Feb 10th, 2025

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய இலங்கை பெண் , மலேசியாவில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம்

மலேசியாவின் இப்போவுக்கு அருகிலுள்ள மேருவில் பகுதியில் ,வியாழக்கிழமை அதிகாலை பெண்ணொருவர் அவரது கணவரின் ஆணுறுப்பு மற்றும் மற்றும் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார்

நேற்று அதிகாலை 12.36 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக மலேசியன் பொலிஸார் தெரிவித்தனர்
குற்றம் இடம்பெற்ற இடத்தில் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி என்று நம்பப்படும் ஒரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.

தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவராதபோதிலும், இலங்கை நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் மனைவியை பொலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் , பாதிக்கப்பட்ட நபர் நிலையான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸார் கூறியுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்